Asianet News TamilAsianet News Tamil

Delhi : பிறந்த குழந்தைக்கு 5 லட்சம்.. டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை கடத்தல் விவகாரம் - CBI அதிரடி!

New Delhi : குழந்தை கடத்தல் தொடர்பாக டெல்லி முழுவதும் பல இடங்களில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

New Born Childs missing in Delhi CBI raid reveals a big crime ans
Author
First Published Apr 6, 2024, 6:50 PM IST

இந்திய தலைநகர் டெல்லியில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படும் சம்பவம் குறித்து CBI அதிகாரிகள் டெல்லி முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தலைநகர் கேசவ்புரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 3 பிறந்த குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகின்றது.

மேலும் இந்த விவகாரத்தில் நடந்த சில விஷயங்கள் குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளை கள்ள சந்தையில் பண்டங்களை போல வாங்கி விற்று வருகின்றனர். குழந்தைகளை விற்ற பெண் மற்றும் வாங்கியவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் சிபிஐ தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

ராவணனுக்கு மாட்டிறைச்சி கொடுத்த சீதை! ஐஐடி மாணவர்கள் நடத்திய நாடகத்தால் புதிய சர்ச்சை!

இந்த நடவடிக்கையின் கிளைகளானது டெல்லி மட்டுமல்லாமல் அதன் எல்லைகளுக்கு அப்பால் நீண்டுள்ளது என்றும் CBI தெரிவித்துள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) முழுவதும் ஏழு முதல் எட்டு குழந்தைகளை கடத்துவதில் ஈடுபட்டுள்ள நபர்களை சிபிஐ கைது செய்கிறது. கைது செய்யப்பட்டவர்களில் மருத்துவமனை வார்டு பாய் மற்றும் பல பெண்களும் அடங்குவர். 

சிபிஐ ஆதாரங்களின்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 குழந்தைகள் இது போல கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளனர், இந்த சம்பவத்தில் இப்பொது மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரணை இப்போது பல மாநிலங்களில் பரவியுள்ளது, பல பெரிய மருத்துவமனைகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டுள்ளன. புதிதாகப் பிறந்த குழந்தைகள் சுமார் 4 முதல் 5 லட்சம் வரை விலைக்கு விற்கப்படுவதாக CBI வட்டாரங்கள் தெரிவித்தன.

இளைஞரைக் கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்; உ.பி.யில் அட்டூழியம்!

Follow Us:
Download App:
  • android
  • ios