Netzones that follow Priya Warrier

இன்ஸ்டாகிராமை தொடங்கிய பேஸ்புக் நிறுவனர் ஜூகர்பெர்க்கைக் காட்டிலும், கண்ணழகி பிரியா வாரியாருக்கு ஃபாலோவர்ஸ் அதிகரித்துள்ளது.

ஒரே வீடியோவில், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். 'உரு அடார் லவ்' படத்தில் வரும் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய முகபாவனைகள் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் பிரியா வாரியாரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை லட்சங்களை எட்டியுள்ளது. அந்த பாடல் காட்சியில் இடம் பெற்ற பிரியா வாரியாரின் கண்ணசைவுகள், முகபாவனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தின் பாடல், பெரும் வரவேற்பை பெற்று ஏறக்குறைய 4 கோடி ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் நடிகை பிரியா வாரியாருக்கு 6 லட்சத்து 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ் ஒரே நாளில் இணைந்து, ஏறக்குறைய ஒரு வாரத்துக்குள் பிரியாவை பின் தொடரபவர்களின் எண்ணிக்கை 45 லட்சமாக உயர்ந்துள்ளது. 

இன்ஸ்டாகிராமை தொடங்கிய பேஸ்புக் நிறுவனர் ஜூகர்பெர்க்குக்குகூட இல்லை என்பது வியப்பாகும். தற்போது அவருக்கு 40 லட்சம் ஃபாலோவர்ஸ் மட்டுமே உள்ளனர். ஒரு வாரத்தில் அவரைக் காட்டிலும் பிரியா வாரியாருக்கு ஃபலோவர்ஸ் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.