கண்களில் ஒத்திக்கொள்ளும் நேபாள சிறுமியின் கையெழுத்து... 

நேபாளத்தை சேர்ந்த பிரக்ரிதி மாலா என்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, உலகிலேயே மிக அழகான கையெழுத்துக்கு 
சொந்தக்காரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உன்னோட கையெழுத்து மாதிரி மோசமான எழுத்தை எங்கேயும் பார்த்ததில்லை...! கையெழுத்தா இது...? தலையெழுத்து மாதிரி இருக்கு? என்பது போன்ற விமர்சனங்களை நாம் அன்றாடம் கேட்டு வருகிறோம்.

ஆனால், நேபாளத்தை சேர்ந்த பிரக்ரிதி மாலா என்ற சிறுமி இதனை எதிர் கொண்டிருக்க மாட்டார் என்பதை நாம் 
அடித்து கூறலாம். அவரது கையெழுத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சரியப்பட்டே போவார்கள். நேபாளத்தில் உள்ள பிரபல பள்ளியான சைனிக் அவசியா மகா வித்யாலயா பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

 

பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து, மைக்ரோசாப்ட் வேர்டைக் காட்டிலும் அழகாக அமைந்துள்ளது. கணிப்பொறியில் இருந்து பிரிண்ட் எடுத்ததுபோல், எழுத்துக்கள் நேராகவும், எழுத்துக்களுக்கு இடையேயான இடைவெளி சீராகவும் இருக்கிறது. பிரக்ரிதி மாலா, தன்னுடைய கையெழுத்துக்காக நேபாளி ஆயுதப் படையிடம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.