Neet Exam Result Output
மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இன்று 2 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. நாடு முழுவதும் 2,225 மையங்களில் சுமார் 13 லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினார். தமிழகத்தில் 10 நகரங்களில் 170 மையங்களில் 1,07,2888 மாணவ மாணவிகள் தேர்வெழுதினர்.
தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் மே 25 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டன. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. ஆனால், முன்னதாகவே நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 691 என்பது தேசிய அளவில் முதல் மதிப்பெண்ணாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே நீட் தேர்வு பர்சன்டேஜ் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்றும் அதேபோல தமிழகத்திலும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
