நீட் 2023 : அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு.. வெளியான முக்கிய தகவல்..
நீட் தேர்வுக்கான நுழைவு அட்டை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் இளங்கலை தேர்வு என்பது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், நர்சிங் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். அதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் நடப்பாண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு, மே 7 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
NEET UG தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்கள் இருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் 50 பல தேர்வு கேள்விகள் இரண்டு பிரிவுகளாக (A மற்றும் B) பிரிக்கப்படும். தேர்வின் காலம் மதியம் 2:00 முதல் மாலை 5:20 வரை அதாவத 200 நிமிடங்கள் இருக்கும். இத்தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறும். மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படும்..
இதையும் படிங்க : இனி விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு காலம் அவசியமில்லை.. உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
இந்நிலையில் நீட் தேர்வுக்கான நுழைவு அட்டை தேசிய தேர்வு முகமை விரைவில் வெளியிட உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் அனுமதி அட்டையை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக, நீட் தேர்வு நகரச் சீட்டை ஏப்ரல் 30, 2023 அன்று வெளியிட்டது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (இளநிலைப் பட்டப்படிப்பு) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வு அறிவிப்புச் சீட்டைப் பதிவிறக்கலாம்.
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் "தேர்வர்கள் 30 ஏப்ரல் 2023 முதல் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இருந்து NEET (UG) - 2023 (தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி) தங்களின் தேர்வு நகர அறிவிப்புச் சீட்டை சரிபார்த்து/பதிவிறக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
NEET 2023 சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப்: பதிவிறக்குவது எப்படி?
படி 1: NEET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள 'NEET (UG) 2023 City Display Link' கிளிக் செய்யவும்.
படி 3: இப்போது உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
படி 4: சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப்பைப் பதிவிறக்கவும்.
NEET UG 2023 அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
படி 1: NEET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள 'NEET UG 2023 Admit Card' கிளிக் செய்யவும்.
படி 3: இப்போது உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
படி 4: உங்கள் அட்மிட் கார்டு காட்டப்படும், இப்போது அதைப் பதிவிறக்கவும்.
இதையும் படிங்க : மாதம் ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை.. டிகிரி இருந்தால் போதும்.. விவரம் உள்ளே..