Asianet News TamilAsianet News Tamil
breaking news image

இந்திய வரலாற்றில் NDA மிகவும் வெற்றிகரமான கூட்டணி.. பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்..

இந்திய வரலாற்றில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வெற்றிகரமான கூட்டணி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

NDA Parliamentary Meet : PM Modi Speech Highlights: NDA Most Successful Alliance In India's History Rya
Author
First Published Jun 7, 2024, 2:41 PM IST

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்.டி.ஏ கூட்டணியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இதற்கான தீர்மானத்தை இன்று ஒருமனதாக நிறைவேற்றினார்.  என்.டி.ஏ கூட்டனியின் நாடாளுமன்ற குழு தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது நரேந்திர மோடியின் பெயரை முதலில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்கால் முன்மொழிந்தார். பின்னர் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் அதனை ஆதரித்தனர். இதன் மூலம் அவர் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

இதை தொடர்ந்து உரையாற்றிய மோடி இந்திய வரலாற்றில் தேசிய ஜனநாயக கூட்டணியை மிகவும் வெற்றிகரமான கூட்டணி என்று கூறினார். மேலும்  "இந்தியாவின் வரலாற்றில் இது மிகவும் வெற்றிகரமான கூட்டணி; நமது எல்லா முடிவுகளிலும் ஒருமித்த கருத்தை எட்டுவதே நமது நோக்கம். இவ்வளவு பெரிய குழுவை வரவேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள். ஆனால், அந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்தனர், கட்சிக்கா உழைத்த அனைவரையும் நான் தலைவணங்குகிறேன்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Rahul Gandhi : பங்குச்சந்தை ஊழல்.. காங்கிரஸ் தலைவர் ராகுலின் குற்றச்சாட்டு - பியூஷ் கோயல் கொடுத்த பதிலடி என்ன?

மேலும் பேசிய அவர் “ தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருவது பெருமைக்குரிய விஷயம் மற்றும் என் மீதும் எங்கள் தலைவர்கள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குறிக்கிறது. என்னை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நீங்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்தது எனது அதிர்ஷ்டம். நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு புதிய பொறுப்பை வழங்கியுள்ளீர்கள், நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

2019ஆம் ஆண்டு இந்த அவையில் நான் பேசும்போது, ​​நீங்கள் அனைவரும் என்னை தலைவராகத் தேர்ந்தெடுத்தீர்கள், அப்போது நம்பிக்கையான ஒன்றை நான் வலியுறுத்தினேன். இன்று நீங்கள் எனக்கு இந்த பாத்திரத்தை கொடுக்கிறீர்கள் என்றால், நமக்கு இடையிலான நம்பிக்கையின் பாலம் வலுவாக உள்ளது என்று அர்த்தம். இந்த உறவு நம்பிக்கையின் வலுவான அடித்தளத்தில் உள்ளது மற்றும் இது மிகப்பெரிய சொத்து.

மிகச் சிலரே இதைப் பற்றி விவாதிக்கிறார்கள், ஒருவேளை இது அவர்களுக்குப் பொருந்தாது, ஆனால் இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தின் வலிமையைப் பாருங்கள் - இன்று, மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை அரசாங்கத்தை அமைத்து 22 மாநிலங்களில் பணியாற்ற அனுமதித்துள்ளனர்.

அனைத்து மதங்களும் சமம் என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நம் நாட்டில் 10 மாநிலங்களில் பழங்குடியின சகோதரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, இந்த 10 மாநிலங்களில் 7ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படுகிறது. கோவாவாக இருந்தாலும் சரி, வடகிழக்கு மாநிலங்களானாலும் சரி, அங்கு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அந்த மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

பரஸ்பர நம்பிக்கையே இந்தக் கூட்டணியின் அடிப்படை. அடுத்த 10 ஆண்டுகளில் என்.டி.ஏ அரசாங்கம் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச தலையீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். என்.டி.ஏ என்பது அதிகாரத்திற்காக ஒன்று சேர்ந்த கட்சிகளின் குழு அல்ல, தேசத்திற்கே முன்னுரிமை என்ற கொள்கையில் இருந்து உருவான கூட்டணி.

ஒரு அரசாங்கத்தை நடத்துவதற்கு பெரும்பான்மை முக்கியம், இது ஜனநாயகத்தின் கொள்கையும் கூட, ஆனால் ஒரு நாட்டை ஆளுவதற்கு ஒருமித்த கருத்து மிகவும் முக்கியமானது. அரசாங்கத்தை நடத்துவதற்கு அவர்கள் வழங்கிய பெரும்பான்மையை, ஒருமித்த கருத்துக்கு பாடுபடுவோம், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் எந்தக் கல்லையும் விட்டுவிடாமல் இருப்பதே எங்கள் முயற்சியாக இருக்கும் என்று நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

அண்ணாமலையை விமர்சிக்க அதிமுகவுக்கு தகுதி இல்லை - தமிழக பாஜக!

என்.டி.ஏ மூன்று தசாப்தங்களை நிறைவு செய்துள்ளது, இது சாதாரண விஷயம் அல்ல. மிக வெற்றிகரமான கூட்டணி என்று சொல்லலாம். தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி மூன்று தசாப்தங்களாகின்றன. மூன்று தசாப்த கால பயணம் பெரும் வலிமையின் செய்தியை அனுப்புகிறது. ஒரு காலத்தில் நான் ஒரு தொண்டராக கூட்டணியில் அங்கம் வகித்து இன்று உங்கள் அனைவரோடும் இணைந்து பணியாற்றுகிறேன் என்பதை இன்று பெருமையுடன் கூறுகிறேன்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி “ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தேர்தல் ஆணையத்தையும் கேள்வி கேட்பவர்கள் முடிவுகளுக்குப் பிறகு அமைதி காக்கப்பட்டதுதான் இந்தியாவின் ஜனநாயகத்தின் சக்தி. இந்தியா கூட்டணி தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆதார் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கேள்வி கேட்கும் போது, ​​முந்தைய நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று நான் உறுதியாக உணர்கிறேன்.

எனக்கு நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் சமம். ​​நம் கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மைப் பொறுத்தவரை அனைவரும் சமம். கடந்த 30 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாகவும் முன்னேறியதற்கும் இதுதான் காரணம்.

ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ​​நான் வேலையில் மும்முரமாக இருந்தேன். பலர் என்னை அழைக்க ஆரம்பித்ததும், நான் அவர்களிடம் இவிஎம் உயிருடன் இருக்கிறதா இல்லையா என்று கேட்டேன். எதிர்க்கட்சி தலைவர்கள்  மக்கள் ஜனநாயகம் மற்றும் இந்தியாவின் ஜனநாயக செயல்முறை மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்த முடிவு செய்திருந்தனர்.

அவர்கள் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவதூறு பரப்பி வந்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இறுதி ஊர்வலத்தை அவர்கள் வெளியே எடுப்பார்கள் என்று நினைத்தேன். இருப்பினும், ஜூன் 4 மாலைக்குள், அவர்கள் இந்தியாவின் ஜனநாயகத்தின் வலிமையைக் கண்டனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பற்றி கேட்க முடியாது என்று நம்புகிறேன். ஆனால், 2029ல் நாம் செல்லும்போது, ​​அவர்கள் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றி அலசுவார்கள். அவர்களை நாடு மன்னிக்காது.

10 ஆண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸால் 100-ஐத் தொட முடியாது.; 2024 லோக்சபா முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக நான் பார்க்கிறேன், ஆனால் எதிர்க்கட்சிகள் நமது வெற்றியை நிராகரிக்க முயன்றன.
எதிர்க்கட்சி எம்.பி.க்களும் நாடாளுமன்றத்திற்கு வரும்போது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இது, அங்கு என்ன இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. தோற்கடிக்கப்பட்டவர்களை கேலி செய்வது நமது கொள்கை அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் ஆட்சியில் உள்ளது என்பது ஒரு குழந்தைக்கு கூட தெரியும். இன்னும் ஆண்டுகளுக்குப் பிறகும் நமது கூட்டணி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்.” என்று தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios