ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் காவல்துறை சோதனைக்கு செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் காவல்துறை சோதனைக்கு செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏசியாநெட் செய்தி சேனலின் கொச்சி அலுவலகத்தில் SFI அமைப்பினரின் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து அந்த செய்தி நிறுவனத்தின் கோழிக்கோடு அலுலவகத்தில் நடத்தப்பட்ட போலீஸ் ரெய்டு ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(a) இன் கீழ் இது ஊடகங்களின் பேச்சு சுதந்திரத்தின் மீதான நேரடித் தலையீடு என்று என்பிடிஏ (NBDA ) கூறியுள்ளது.
ஐயத்திற்கு இடமின்றி இந்தத் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறிய என்பிடிஏ, "நாட்டின் நான்காவது தூணாக உள்ளவை ஊடகங்கள். ஜனநாயகம் மற்றும் பொதுநலன் சார்ந்த செய்திகளைப் வெளியிடும் அதன் செயல்பாடு இன்றி அமையாதது. எனவே, ஊடகங்கள் தங்கள் கடமைகளைச் செய்யவிடாமல் தடுக்கும் எந்தச் செயலும் அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்" என்று எடுத்துரைத்துள்ளது.
"எந்த ஒரு தனிநபரும் அல்லது அதிகாரிகளும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டும் வகையில், தாக்குதல் நடத்திய நபர்கள் மற்றும் சோதனை நடத்திய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வரை என்பிடிஏ வலியுறுத்துகிறது" என்றும் என்பிடிஏ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் அமைந்துள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் SFI அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அங்கு பணிபுரியும் செய்தியாளர்களையும் மிரட்டியச் சென்றனர். இந்தச் சம்பவத்துக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. கொச்சி, திருச்சூர், கன்னூர் உள்ளிட்ட கேரளாவின் பல இடங்களில் SFI தாக்குதலைக் கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்கள் நடந்தன.
போலி வீடியோக்களை நம்பாதீர்கள்: லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் வேண்டுகோள்
தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி அளவில் ஏசியாநெட் நியூஸ் கோழிக்கோடு அலுவலகத்தில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கேரளாவில் ஆளும் சிபிஐ (மார்க்சிஸ்ட்) கட்சியின் ஆதரவு பெற்ற எம்எல்ஏ பி. வி. அன்வர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை 4 மணி நேரம் நீடித்தது. இந்தச் சோதனையை நடந்த கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து காவல்துறைக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் கோழிக்கோடு ஏசியாநெட் அலுவலகத்தைச் சோதனையிட்டு கம்ப்யூட்டர்களைப் பறிமுதல் செய்துவரவேண்டும் என்றும் முதல்வர் அலுவலகம் காவல்துறையை அறிவுறுத்தியுள்ளது. காவல்துறையினர் ஏசியாநெட் நியூஸ் அலுலவகத்தில் கம்ப்யூட்டர்களைச் சோதனையிட்டாலும் அவற்றைப் பறிமுதல் செய்யுமாறு கூறியதைக் கைவிட்டனர்.
Jallikattu Insurance: ஜல்லிக்கட்டு நடத்த ரூ.5 லட்சம் காப்பீடு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு
