போலீசரால் தேடப்பட்டு வந்த நக்சலைட் இயக்கத்தின் முக்கிய தளபதி உள்ளிட்ட 6 பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
ஜார்க்கன்ட், பிஹார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து போலீசாரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஜார்க்கன்ட் மாநிலத்தை சேர்ந்த நக்சலைட் இயக்கத்தின் முக்கிய தளபதி Pradeep Singh Kharwar உள்ளிட்ட சிலர் உத்தரப்பிரதேச மாநிலம் Noida-வில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டை சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டதன் மூலம் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட இருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
