ஒடிஷாவில் நக்சலைட் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்துச் சிதறியதில் உயிாிழந்த பாேலீஸாரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் அதிக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் உள்ள கோரபுட் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருந்தனர்.
இதையறியாத போலீஸார் நேற்று வாகனம் மூலம் அவ்வழியாகச் சென்றபொது கண்ணிவெடியில் சிக்கினர்.

இதில் வாகனம் வெடித்துச் சிதறியதில் சம்பவ இடத்திலேயே 5 போலீசார் உயிரிழந்தனர். மேலும் தாக்குதலில் பலியான இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, குண்டு கண்டுபிடிக்கப்பட்ட Charsoo Awantipora பகுதியில் உள்ள ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு காவல்துறையினர், ராஷ்டீரிய ரைபில் படை பிரிவினர் விரைந்தனர்.
பின்னர் பல மணி நேரம் போராடி, வெடிகுண்டை செயலிழக்கச் செய்ததால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
