மின்சார ரயிலில் கர்பா நடனமாடி மகிழ்ந்த பெண்கள்.. 1 லட்சம் பார்வையாளர்களை கடந்த வைரல் வீடியோ
மும்பையில் மின்சார ரயிலில் பெண்கள் ஒன்றாக கூடி நவராத்திரி விழாவை வரவேற்கும் வகையில், கர்பா நடனம் ஆடும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையில் மின்சார ரயிலில் பெண்கள் ஒன்றாக கூடி நவராத்திரி விழாவை வரவேற்கும் வகையில், கர்பா நடனம் ஆடும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா இந்த வாரம் தொடங்கிய நிலையில், வட மாநிலங்களில் கர்பா நிகழ்ச்சிகள் களைக்கட்டியுள்ளன. பொதுமக்கள் ஆடியும், பாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:பறக்கும் ரயிலில் தொங்கியப்படி பயணிக்கும் இளைஞர்கள்.. வீடியோ வைரல்
இந்நிலையில் மும்பையில் மின்சார ரயிலில் பெண்கள் ஒன்றாக கூடி கர்பா நடனம் ஆடும் வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோ இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது. தற்போது இதனை ஏராளமானோர் ரீட்விட் செய்து வருகின்றனர்.
இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு நவராத்திரியை கொண்டாடும் வகையில் மேரைன் ட்ரிவில் ஏராளமானோர் ஒன்றாக கூடி கர்பா நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டது.