நாக்பூரில் லாரியும் - பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூரில் இருந்து கட்சிரோலிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்ககுள்ளானது.

 

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து சம்ப இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.