தனது சைக்கிளை ஒரமாக நிறுத்தி வைத்து விட்டு கையில் இருந்த கதையை கீழே வைத்தி விட்டு உடனடியாக அந்த பெண்ணிடம் வந்து அவருக்கு உதவி செய்கிறார்.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் வீடியோக்களில் குறிப்பிட்ட சில வீடியோக்கள் மட்டும் நம் மனதிற்குள் மிகழ்சிசையை கொண்டு வருவதோடு, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். இவ்வாறான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

இந்த வீடியோவில் அதிக சுமை கொண்ட கூடை ஒன்றை முஸ்லீம் மத பெண் தனது தலையில் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து வருகிறார். கூடை முழுக்க பழங்கள் இருந்துள்ளன. திடீரென நிலை தடுமாறிய முஸ்லீம் பென், சமாளிக்க முடிாமல் தலையில் வைத்திருந்த பழக் கூடையை கீழே போட்டு விடுகிறார். பின் சாலையில் பழங்கள் சிதறியதை அடுத்து, அவற்றை சேகரித்து மீண்டும் கூடையில் போட்டு கொண்டு இருந்தார்.

சைக்கிளில் வந்த அனுமன்:

அப்போது அந்த வழியாக கையில் கதையுடன் அனுமன் வேடம் அணிந்த நபர் ஒருவர் சைக்கிளில் வந்தார். முஸ்லீம் பெண் சாலையில் பழங்களை எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும், தனது சைக்கிளை ஒரமாக நிறுத்தி வைத்து விட்டு கையில் இருந்த கதையை கீழே வைத்தி விட்டு உடனடியாக அந்த பெண்ணிடம் வந்து அவருக்கு உதவி செய்கிறார்.

அனுமன் வேடத்தில் வந்த நபர், முஸ்லீம் பெண்ணிற்கு எந்த வித எதிர்பார்ப்பார்ப்பும் இன்றி தானாக முன் வந்து உதவி செய்தார். இறுதியில் தனக்கு உதவி செய்த நபருக்கு அந்த முஸ்லீம் பெண் தனது இரு கைகளை கூப்பி நன்றி தெரிவித்தார். பதிலுக்கு அவரும் இரு கைகளை கூப்பி வணங்குகிறார்.

முஸ்லிம் பெண் கைமாறு:

உதவி செய்ததற்கு கைமாறாக முஸ்லீம் தன்னிடம் இருந்த பழங்களில் ஒன்றை எடுத்து அந்த நபரிடம் வழங்குகிறார். அவர் பலமுறை தடுத்து நிறுத்தி தனக்கு வேண்டாம் என பதில் அளிக்கிறார். இருவரும் சில நொடிகள் பேசிக் கொண்டிருந்தனர். பின் வேறு வழியின்றி முஸ்லீம் பெண் கொடுத்த பழத்தை அந்த நபர் வாங்கிக் கொண்டு, வணக்கம் தெரிவித்து பின் பேசிக் கொண்டிருந்தார்.

உண்மையில், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்றோ, அதில் இருப்பவர்கள் யார் என்பது பற்றியோ இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வைரல் ஆகி வருகிறது. தற்போது வைரல் ஆகி வரும் இந்த வீடியோவை இதுவரை சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமமானோர் பார்த்துள்ளனர். மேலும் பலர் இந்த சம்பவத்தை மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணம் என்ற வகையில் பாராட்டி மகிழ்கின்றனர்.