மத்தியப்பிரதேசத்தில் ரிக்சா ஓட்டுநரை தாக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மத்தியப்பிரதேசத்தில் ரிக்சா ஓட்டுநரை தாக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் முகக்கவசம் சரியாக அணியாத நபரை 2 காவலர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ பரவியதை அடுத்து பொதுமக்களும், பத்திரிகை ஊடகங்களும் காவல்துறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Scroll to load tweet…

இதனை தொடர்ந்து உரிய விசாரணை நடத்துமாறு காவல் அதிகாரிக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், தாக்கப்பட்ட நபர் ரிக்சா ஓட்டுநர் என்றும், அவர் முகக்கவசம் சரியாக அணியாததால் தாக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 காவலர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.