அக்காவின் திருமணத்திற்கு துணி எடுக்கப்போன 20 வயது இளைஞர், ஓடும் மின்சார ரயிலில் வாசலில் தொங்கியபடி சாகசம் செய்தபோது கம்பியில் மோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

ரயிலில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதும் விபத்து ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. எவ்வளவு தான் ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டாலும் கல்லூரி மாணவர்கள் திருந்தியபாடியில்லை. ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒருபக்கம் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தாலும், மறுபக்கம் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கல்யான் பகுதியைச் சேர்ந்தவர் டாக்சி ஓட்டுநரான நௌஷாத் கான் என்பவரின் மகன் தில்ஷாத் (20). சில மாதங்களுக்கு முன்புதான் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், தனது பெரியப்பா மகளின் திருமணத்திற்காக புது துணிகள் எடுக்க மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, அவர் சாகசம் செய்ய அதை ரயிலின் உள்ளே இருந்த அவனது நண்பன் வீடியோவாக பதிவு செய்துள்ளான்.

 

அப்போது, எதிரே இருந்த கம்பத்தின் மீது மீது பயங்கரமாக மோதியதில், இளைஞர் தில்ஷாத் அப்படியே ரயிலின் மீது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ரயிலில் ஸ்டண்ட் செய்ய வேண்டாம், அது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது என்ற குறிப்புடன் இந்த வீடியோவை, ரயில்வே அமைச்சகம் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.