மும்பையில் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க 12 வயது சிறுமி ஒருவர் 4 ஆவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த  சிறுமி மருத்துவமனையிணுல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாகாராஷ்ட்ரா மாநிலம் புல்காதர் மாவட்டம் நாலசோபராவில் கடந்த 3-ம் தேதி  12 வயது சிறுமி ஒருவர் சாலையில் விளையாக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர்  அந்த சிறுமியிடம்  ஒரு வீட்டின் முகவரியை கேட்டுள்ளார்.

அதற்கு அந்த சிறுமி தான் காட்டுவதாக கூறி அங்கிருந்த அடுக்கு மாடி குடியிருப்பிக்கு அழைத்துச் சென்றுள்ளார். உதவி செய்யும் நோக்கத்துடன் வந்த சிறுமியிடம் அந்த இளைஞர் சிலமிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி 4 ஆவது மாடிக்கு ஓடிச் சென்றுள்ளார். மாடியில் அந்த சிறுமியை அந்த இளைஞன் கற்பழிக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து அந்த கயவனிடம் இருந்து தப்பிப்பதற்காக உடனடியாக சிறுமி 4 வது மாடியில் இருந்து குதித்துவிட்டார். சிறுமி குதிப்பதை கீழே இருந்து பார்த்த தொழிலாளர்கள் தார்ப்பாய் உதவியுடன் பிடித்து உள்ளனர். இருப்பினும் சிறுமிக்கு எழும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. 

இதையடுத்து சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். .மேலும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வருகிறார்கள்.