Limca Recordல் இடம் பிடித்த ராட்சச விளம்பர பலகை.. 14 பேரை காவு வாங்கிய பரிதாபம் - மும்பையில் நடந்தது என்ன?

Mumbai Bill Board Collapse : மும்பை நகரில் நேற்று வீசிய கடும் புழுதி புயலில் ராட்சச விளம்பர பலகை ஒன்று சாய்ந்து விழுந்தலில் அருகே இருந்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Mumbai Dust Storm giant billboard collapsed in petrol bunk killed 14 ans

மும்பையின் வீசிய புழுதி புயலில், காட்கோபரில் இருந்த 14,400 சதுர அடி பரப்பளவு கொண்ட விளம்பர பலகை ஒன்று இடிந்து அருகில் இருந்த பெட்ரோல் பங் மீது விழுந்ததில், 14 பேர் பலியாகினர் மற்றும் 74 பேர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர். இந்த கோர சம்பவம் மும்பை நகரத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.

"என் சகோதரர், ஒரு ஆட்டோ டிரைவர், CNG நிரப்பச் சென்றுள்ளார், அப்போது அவர் மீது அந்த பலகை விழுந்தபோது அவர் வரிசையில் எரிபொருள் நிரப்ப நின்றுள்ளார். விஷயம் அறிந்து நாங்கள் அங்கு சென்றோம், ஆனால் போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை. பின்னர் அவர்கள் எங்களை மருத்துவமனைக்கு அனுப்பினர், அங்கு நாங்கள் புகைப்படங்களைக் காட்டி விசாரித்தபோது அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது என்று ஒருவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

வேகமாக பரவும் மஞ்சள் காய்ச்சல்.. மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை..

குடும்பத்தின் பாரத்தை சுமந்து வந்தவர் அவர் தான். "நாங்கள் ஏழைகள்... நாங்கள் எங்கே போவோம், என்ன செய்வோம்? அவர் தனது மனைவியையும், குழந்தையையும் விட்டுச் சென்றுள்ளார். நிச்சயம் இந்த விஷயத்தில் போலீசார் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார் அவர். அதே போல அந்த பெட்ரோல் நிலையத்தில் 2 வருடங்களாக பணிபுரிந்து வந்த வந்த ஒருவரும் உடல் நசுங்கி இறந்துள்ளார்.

இதற்கிடையில் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த 120 X 120 அடி அமைப்பு "சட்டவிரோதமாக" அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, விளம்பர நிறுவனத்திற்கு அதையும் மற்ற கட்டமைப்புகளையும் அமைக்க அனுமதி வழங்கவில்லை என்று ஒரு சாரார் தொடர்ச்சியாக புகார் அளித்து வருகின்றனர். 

BMC விளம்பர பலகை அளவுகளை 40 x 40 அடிக்கு மட்டுமே கட்டுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "நகரில் உள்ள அனைத்து சட்டவிரோத பதாகைகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம் என்று BMC கமிஷனர் பூஷன் கக்ரானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Modi : சொந்த வீடு, கார் இல்லை.. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த பிரதமர் மோடி - கூறியுள்ள தகவல்கள் என்னென்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios