மும்பை.. வரலாறு காணாத புழுதிப் புயல்.. திடீரென சாய்ந்த விளம்பர பலகை.. 3 பேர் பலி, 59 பேர் காயம் - Viral Video!
Mumbai Dust Storm : மும்பை நகரில் வரலாறு காணாத அளவில் நகரம் எங்கும் புழுதி புயல் கடுமையாக வீசி வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் காட்கோபரில் இன்று மாலை வீசிய கடும் புழுதிப் புயலுக்கு மத்தியில், அங்குள்ள எரிபொருள் நிலையத்திற்கு அருகில் இருந்த ராட்சச விளம்பர பலகை சாய்ந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளுக்குள் டஜன் கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 59 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த எரிபொருள் நிலையத்திற்கு எதிரே அந்த விளம்பர பலகை இருந்தது. எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு அருகில் அது சாய்ந்து விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. விளம்பர பலகையின் உலோக சட்டமானது எரிபொருள் நிலையத்தில் இருந்த பல கார்களின் கூரையை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.
வரிசையில் வர சொன்ன வாக்காளருக்கு பளார் விட்ட எம்.எல்.ஏ. வேட்பாளர்!
தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) குழுக்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடி வருவதாகவும் அங்குள்ள போலீஸார் தகவல் தெரிவித்தனர். மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்ட X பதிவில், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.
மும்பை பலத்த புழுதிப் புயலில் சிக்கிக் கொண்டுள்ளது, இதனால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியது, மரங்கள் மற்றும் கட்டமைப்புகளை வேரோடு பிடுங்கியுள்ளது இந்த புழுதி புயல். மேலும் நிதித் தலைநகரான மும்பையின் பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புழுதிப் புயல் நகரைத் தாக்கியபோது வானம் இருண்டதை மக்கள் சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
உள்ளூர் ரயில்கள், மெட்ரோ நெட்வொர்க்கின் ஒரு பகுதி மற்றும் விமான நிலைய சேவைகள் இருள் சூழ்ந்த வானத்தின் மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. "நகரத்தில் மோசமான வானிலை மற்றும் புழுதிப் புயல் காரணமாக, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (CSMIA) குறைந்த பார்வை மற்றும் பலத்த காற்று காரணமாக சுமார் 66 நிமிடங்களுக்கு விமான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது" என்று மும்பை விமான நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"மீண்டும் மாலை 5:03 மணி அளவில் விமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. CSMIA கடந்த வாரம் அதன் மழைக்காலத்திற்கு முந்தைய ஓடுபாதை பராமரிப்பை வெற்றிகரமாக முடித்தது, பாதுகாப்பான மற்றும் மென்மையான விமான செயல்பாடுகளை உறுதி செய்தது. செயல்திறன் மற்றும் பயணிகளின் பாதுகாப்பில் உறுதியுடன் உள்ளது. தடையற்ற செயல்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்" என்று அது கூறியுள்ளது.
இந்தியா கூட்டணியினர் கோழைகள்: பிரதமர் மோடி தாக்கு!