கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. மகாராஷ்ரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து இந்தியாவில் அதிக பாதிப்பு இருக்கும் முதல் மாநிலமாக மாறியுள்ளது. மகாராஷ்ராவில் முக்கியமாக மும்பையில் உள்ள தாராவி பகுதியில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: அம்மாடியோவ்! முடியை வைத்து முன்னழகை மறைத்த இலியானா... பெருமூச்சு விட்ட ரசிகர்கள்...! 

ஆசியாவில் அதிக குடிசை பகுதிகளை கொண்ட மற்றும் அதிகம் தமிழர்கள் வசிக்கும் இடமான தாராவியில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் கூடிக்கொண்டே செல்கிறது. தாராவியில் அதிக குடிசை வாழ் மக்கள் இருப்பதால் நோய் அதிகமாக பரவும் அபாயம் உள்ளது. 

தாராவியில் சுமார் 8 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், இன்று ஒரே  நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தாராவியில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 808 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 26 ஆக அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: கண்களில் கவர்ச்சி ததும்ப கிளாமர் போஸ்... “மாஸ்டர்” நாயகியின் தாராளத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

மக்கள் மிக நெருக்கமாக வசிப்பதும், குறைந்த அளவிலான கழிப்பறைகளை நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்துவதும் கொரோனா தொற்றுக்கு முக்கியமான காரணம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.