மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில்! கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவு!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 2020 முதல் நடைபெற்று வரும் இத்திட்டத்தில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது என்றார்.

Mumbai Ahmedabad Bullet Train: Undersea ADIT Tunnel Completed sgb

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்கும் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான அகமதாபாத்துக்கும் இடையேயான புல்லட் ரயில் திட்டம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் சர்ச்சைக்குரிய இத்திட்டம் பற்றி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "2020 முதல் (கோவிட் தொற்றுநோய் தொடங்கிய காலத்தில்) நடக்கும் இத்திட்டத்தில், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

394 மீட்டர் நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை 6 மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை 21 கி.மீ நீளமுள்ள பிரதான சுரங்கப்பாதையை அமைக்க உதவும். இதில் கடலுக்கடியில் 7 கி.மீ. தூரம் சுரங்கப்பாதை அமைய உள்ளது.

இத்திட்டத்தின் மொத்த நீளம் 508.18 கி.மீ. அகமதாபாத் மற்றும் மும்பை இடையே புல்லட் ரயில் இயக்கப்படும்போது 12 நிலையங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கம் மும்பையின் வணிக மாவட்டமான பாந்த்ரா -குர்லா காம்ப்ளக்ஸில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு புல்லட் ரயிலுடன் மெட்ரோ ரயிலுக்கான இணைப்பும் இடம்பெறும். அதற்கான கட்டுமானப் பணிகளும் நடக்கின்றன.

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! அலறி அடித்து வெளியேறிய பயணிகள்!

ரூ 1,08,000 கோடி திட்டம்:

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 2026இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும். 1,08,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

கோவிட்-19 காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்தபோது, கட்டுமானப் பணிகள் நடைபெற்றது ​​இத்திட்டத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியது. இத்திட்டத்திற்கான செலவு குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், போக்குவரத்து வசதியைக் கருத்தில் கொண்டு திட்டத்தை இந்தத் திட்டம் அவசியம் என்றும் கூறப்படுகிறது.

பெண் வேடமிட்டு திருமணம் செய்துகொண்ட ஆண்! 12வது நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios