பயணிகள் அவசரகால கதவு மூலம் விரைவாக வெளியேற்றியதை அடுத்து விமானம் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டது. தீவிர சோதனைக்குப் பிறகு சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.

டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு செவ்வாய்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தீவிர சோதனைக்குப் பிறகு சந்தேகத்திற்கு இடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இண்டிகோ நிறுவனத்தின் 6E2211 விமானம், 176 பயணிகளுடன், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

பயணிகள் அவசரகால கதவு மூலம் விரைவாக வெளியேற்றியதை அடுத்து விமானம் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டது. தீவிர சோதனைக்குப் பிறகு சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எல்லா வேலையையும் AI செய்யும்... பொழுது போகாதவர்கள் தான் வேலை செய்வார்கள்!: எலான் மஸ்க்

Scroll to load tweet…

மே 15ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் இருந்து வதோதராவுக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு என எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், சோதனைக்குப் பின் அது வெடிகுண்டு மிரட்டல் அல்ல, வதந்தி என்று தெரிந்தது.

அண்மையில் டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மின்னஞ்சல்களால் வந்தன. இருப்பினும், வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் பொய்யானவை என்று தெரியவந்தது.

எலெக்ட்ரிக் கார்கள் மார்கெட்டை காலி செய்ய வரும் ஹைபிரிட் கார்கள்... என்ன காரணம் தெரியுமா?