Asianet News TamilAsianet News Tamil

பேரக்குழந்தைக்கு அரணாக மாறிய அம்பானி.. சித்திவிநாயகர் கோயில் தரிசனத்தில் நிகழ்ந்த சுவாரசியம்!!

முகேஷ் அம்பானி தன் மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஷ்லோகா மேத்தாவுடன் சித்திவிநாயகர் கோயிலில் தரிசனம் செய்தார். 

Mukesh Ambani  Visits Siddhivinayak Temple With family
Author
First Published May 25, 2023, 4:40 PM IST

உலக பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானி நேற்று (மே. 24) மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி ஷ்லோகா மேத்தா, குட்டி பையன் பிருத்வி அம்பானி ஆகியோர் உடன் இருந்தனர். ஷ்லோகா மேத்தா தற்போது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார். அவரது முதல் மகன் தான் பிருத்வி அம்பானி.

அம்பானி வீட்டு நிகழ்வுகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். தற்போது அவர்கள் குடும்பமாக சுவாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தரிசனத்தின் போது அம்பானியின் மருமகள் ஷ்லோகா இளஞ்சிவப்பு நிற ஆடையில் எளிமையாக இருந்தார். முகேஷ் அம்பானி வெள்ளை நிற குர்தாவில் காணப்பட்டார். ஆகாஷ் அம்பானி டி-சர்ட், ஷார்ட்ஸில் வந்திருந்தார். இந்த தரிசனத்தின் போது பணக்கார மிடுக்கு இல்லாத ஆடைகளில் அம்பானியின் குடும்பத்தினர் இருந்தது கவனம் ஈர்த்தது. 

சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவில், நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், "30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு வழங்கும் நிலையிலும் முகேஷ் அம்பானி தன் பேரக்குழந்தையை தன் அரவணைப்பில் பாதுகாப்பாக வைத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார். பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்தாலும் பேரக்குழந்தைக்கு தாத்தாவாக அம்பானி வலம் வந்த சுவாரசிய சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. 

இதையும் படிங்க: அடேங்கப்பா!! அம்பானி வீட்டு பணியாளர்களுக்கு இத்தனை லட்சமா சம்பளம்?

ambani temple visit

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீதா அம்பானியின் கலாச்சார மையத்தின் (NMACC) தொடக்க விழா கொண்டாட்டத்தில், அம்பானியின் மூத்த மருமகள் ஷ்லோகா மேத்தாவின் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்தனர். கடந்த வாரமும் அம்பானி குடும்பத்தினர் விநாயகப் பெருமானின் ஆசிர்வாதத்தைப் பெற்றனர். அப்போது ஆகாஷ் அம்பானி தன் மகன் பிருத்வியை தூக்கிக்கொண்டு வர, முகேஷ் அம்பானி கடவுளை கரங்களை கூப்பி பவ்யமாக வணங்கினார். 

இதையும் படிங்க: 'திருபாய் அம்பானி' நினைவிடத்துக்கு போக இவ்ளோ தானா கட்டணம்!! எப்போ பொதுமக்களுக்கு அனுமதி தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios