நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம் Mr. மோடி.. பிரதமரின் உரை - பதிலளித்த ராகுல் காந்தி!
இந்திய தலைநகர் புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில், இன்று பிரதமர் மோடி அவர்கள் பேசினார். அப்பொழுது எதிர்க்கட்சியினரை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
நம் பாரத நாட்டில் இந்தியா என்ற பெயரை வைத்துக்கொண்டு மக்களை தவறான திசையில் திருப்பி விட முடியாது என்று கூறி, கிழக்கு இந்திய கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களையும், கட்சிகளையும் அவர் கடுமையாக சாடினார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை தற்பொழுது வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. "நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் மிஸ்டர். மோடி. நாங்கள் இந்தியா, நாங்கள் மணிப்பூர் மீண்டு வருவதற்காக உழைப்போம், அங்கு கண்ணீர் வடிக்கும் மக்களின் துயர் துடைப்போம். மீண்டும் அங்கு அமைதியை நிலைநாட்டுவோம்" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது, மணிப்பூர் குறித்து விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தின. இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதத்திற்கு தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியது. ஆனால் மணிப்பூர் விவாதத்திற்காக, அனைத்து அவை அலுவல்களையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் வலியுறுத்தியதால், அங்கு அமளி தொடர்ந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும், இந்த மழைக்கால அமர்வில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.
என்னது.. 500 ரூபாய் நோட்டு செல்லாதா? மத்திய நிதியமைச்சகம் சொன்ன பதில் இதுதான்..