இப்படியும் இருப்பாங்களா! அம்மாவுக்காக மகன் எடுத்த அபூர்வ முடிவு!
கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தனது தாயாரின் ஆசையை நிறைவேற்ற நாடு முழுவதும் பைக்கில் அவருடன் சுற்றிப்பயணம் செய்துவருகிறார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது தனியார் நிறுவனம் ஒன்றில், பணியாற்றி வந்த இவரது தந்தைதெட்சிணாமூர்த்தி கடந்த 2018ஆம் ஆண்டு மரணம அடைந்தார். அதிலிருந்து கிருஷ்ணகுமார் தன் தாய் சூடாரத்னம்மாவுடன் இந்தியா முழுவதும் ஆன்மிகச் சுற்றுலா சென்றுகொண்டிருக்கிறார்.
44 வயதாகும் கிருஷ்ணகுமார், 74 வயதாகும் தாயுடன் ஒரு பழைய இருசக்கர வாகனத்தில்தான் இந்த ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ்நாடு உள்பட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
"எங்கள் கூட்டுக்குடும்பத்தில் என் அம்மா ஓய்வே இல்லாமல் உழைத்தார். அப்பா இறக்கும் வரை வீட்டை விட்டு வெளியில் எங்குமே போனதில்லை. அருகில் உள்ள கோயிலுக்குகூட போனது கிடையாது. எல்லா இடங்களையும் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று சொன்னார்" என்று கூறும் கிருஷ்ண குமார் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
பெருமிதத்துடன் வாழ்ந்தவர் உங்கள் தாய்: பிரதமர் மோடிக்கு தலாய் லாமா ஆறுதல்
அப்பா வாங்கிக் கொடுத்த பைக்கில் செல்வதால் அப்பாவும் உடன் வருவது போல உணர்வதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். வேலை பார்த்து சேமித்து வைத்திருந்த தொகையை இந்தப் பயணச் செலவுக்குப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
ஆறு மொழிகள் தெரிந்து வைத்திருக்கும் கிருஷ்ண குமார் போகும் இடங்களில் பைக்கில் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும் தானே சரிசெய்துவிடும் அளவுக்கு வித்தைகளை கைவசம் வைத்திருக்கிறார்.
அம்மாவை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பததால் நான் கல்யாணமும் செய்து கொள்ளவில்லை என்கிறார் கிருஷ்ணகுமார். தாய் சூடாரத்னம்மாவும் இப்படி ஒரு மகன் கிடைக்க கொடுத்து வைத்திருப்பதாக பெருமிதம் கொள்கிறார்.
அர்ப்பணிப்பின் உருவமான அம்மா! ஹீராபென் மோடி வாழ்க்கை வரலாறு