Mother And Daughter Raped Killed And Burnt The Chilling Double Murder Of Amritsar Still Has No Suspects
தாய் மற்றும் மகளை கற்பழித்து கொன்ற கும்பல், அவர்களை உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் வசித்து வருபவர் ககன்தீப் வர்மா. அவருக்கு ஷிவ்னைனி வர்மா என்கிற மகள் உள்ளார். ககன்தீப் வர்மா ஒரு பள்ளியில் ஆசிரையையாக பணியாற்றிவருகிறார். ககன்தீப் இருமுறை திருமணங்கள் செய்துள்ளார். ஆனால், இரண்டு கணவருமே அவருக்கு கடைசிவரை வரவில்லை. எனவே, அவர் தன்னுடைய பிள்ளைகளுடன் தனியாக அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். ககன்தீப்பின் மகன் சமீபத்தில் கனடா நாட்டில் வேலைக்கு சென்றுள்ளார்.
ஷிவ்னைனி சமீபத்தில்தான் பி.காம் பட்டப்படிப்பை முடித்துள்ளார். நேற்று முன் தினம் அவர்கள் இருவரும் வீட்டில் எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இதில், ககன்தீப்பின் உடல் முழுவதும் தீக்கு இரையாகி விட்டது. ஷிவ்னைனியின் உடல் 25 சதவீதம் எரிந்த நிலையில் கை, மற்றும் கால்கள் கட்டப்பட்டு இருந்தது. மேலும், அவர்கள் இருவர்களின் உடலிலும் ஆடைகள் இல்லை. எனவே, மர்ம கும்பல் அவர்களின் வீட்டில் நுழைந்து, அவர்களை கற்பழித்து விட்டு, தடயங்களை அழிப்பதற்காக அவர்களை எரித்து விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது.
இந்த சம்பவததையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் அவர்களின் வீட்டிலிருந்து வந்த புகை கலந்த துரு நாற்றம் வீசியது வந்ததால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பின்னரே போலீசார் அங்கு வந்தனர். அங்கு வந்து எறிந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டது.

இந்த சம்பவத்தில் 3 அல்லது 4 பேர் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் இரவு நேரங்களில் நடந்துள்ளது. மேலும், வலுக்கட்டாயமாக யாரும் நுழைந்த அறிகுறியும் இல்லை. எனவே, அவர்கள் கண்டிப்பாக ஏற்கனவே அறிமுகமானவர்களாகத்தான் இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
