Monsoon session of Parliament likely to begin on July 12

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 12-ந்தேதி தொடங்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த ஆண்டு இரு அமர்வுகளாகவும், முன்கூட்டியே தொடங்கியது. அதாவது ஜனவரி 31-ந்தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ந்தேதி வரை நடந்தது.

2-வது அமர்வு மார்ச் 9-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடந்தது. இந்தமுறை ரெயில்வேத்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் பொதுபட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், குறிப்பாக நாடுமுழுவதும் கொண்டுவரப்படும் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமான ஜி.எஸ்.டி. மசோதா இரு அவைகளில் நிறைவேறியது

இந்நிலையில், நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 12-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ந்தேதி வரை நடக்க வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 20ந்தேதிக்கு பின், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்தியஅமைச்சரவைக் குழு கூடஉள்ளது.

அந்த குழுவில் மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்து இறுதியான முடிவு எடுக்கப்படும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.