கேரளாவை தொடர்ந்து ஆந்திராவிலும் குரங்கு அம்மை... சவுதி அரேபியாவில் இருந்து வந்த குழந்தைக்கு அறிகுறி!!
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது 50க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியா, சர்வதேச நாடுகளிலிருந்து வருபவர்களை விமான நிலையம், துரைமுகம் நாட்டில் எல்லைகளில் தடுத்து நிறுத்தி பரிசோதித்து வருகிறது.
இதையும் படிங்க: டி-ஷர்ட் விவகாரத்தில் தகராறு - ஒரு நபரை திருப்பி திருப்பி அறைந்த பெண்!
இந்த நோய்க்கான அறிகுறிகள் இருப்பின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் குரங்கு அம்மை மெல்ல நுழைய தொடங்கியுள்ளது. ஏற்கனவே கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு ஒரு குடும்பத்தினர் வந்துள்ளனர். அவர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அவர்களுடன் நாடு திரும்பிய ஒரு குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: நானும் மோடியும் கல்யாணம் பண்ணிட்டோமா ? பதறியடித்து விளக்கம் கொடுத்த சுஷ்மிதா சென்
அதனால் குழந்தையும் குடும்பத்தினரும் உடனடியாக தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையிடம் எடுத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில் சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டு வெளிநாட்டில் இருந்து வருகிறவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். குழந்தை வந்த விமானத்தில் இருந்த அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. கேரளாவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை தற்போது ஆந்திராவிலும் கண்டறியப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.