பா.ஜ.க.வின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி இன்று தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

அத்வானியின் பிறந்த நாளையொட்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனிடையே, டெல்லியில் உள்ள அத்வானியின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் வாழ்த்து தெரிவித்தார்.

அத்வானி, இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவர். நாட்டுக்காக அயராது பாடுபட்டவர். எங்கள் அனைவருக்கும் அவரே முன்னுதாரணம். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்நாளில், அவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் இறைவன் அருள வேண்டுவதாக மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.