இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவி வரும் கடும் பதற்றம் காரணமாக நாடு முழுவதுமே உஷார் நிலை படுத்தப்பட்டு உள்ளது. அதன் படி, நேற்று காலை சிந்திய போர் விமானம் நடத்திய, தாக்குதலில் பாக் பயங்கர வாதிகள் பலர் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இன்று இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா.

இதன் எதிரொலியாக... தற்போது!

பாகிஸ்தானில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானகளின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது- லாகூர், முல்தான், ஃபைசலாபாத், இஸ்லாமாபாத், சியால்காட் விமான நிலையங்களின் சேவை நிறுத்தம்

பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வந்து செல்லக் கூடிய விமான சேவைகள் கடும் பாதிப்பு.பல விமானங்கள் புறப்பட்ட நாடுகளுக்கே திரும்பிச் செல்வதாக தகவல். சில விமானங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் மாற்று வழி கேட்டு காத்திருப்பதாக தகவல். பாகிஸ்தான் நாட்டில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவை முற்றிலும் நிறுத்தம்.

லாகூர், முல்தான், சியால்கோட், பைசலாபாத், இஸ்லமாபாத் விமான நிலைய சேவை நிறுத்தம்.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை..! 

ஜம்மு-காஷ்மீர் புஞ்ச் பகுதியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு. வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுரை.

எல்லையில் தனது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் நாட்டில்  உள்ள அனைத்து விமான நிலையங்களையும் மூடியது பாகிஸ்தான்.மேலும் பாக் முழுவதுமே பதற்றமான சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில், நாடு முழுவதும் உஷார் நிலையில் இருக்கவும், பாதுகாப்பு பலப்படுத்தவும் இந்தியா மும்முரம் காட்டி வருகிறது