நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், இதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, "நாடாளுமன்ற இரு அவைகளிலும், முக்கியப் பணிகள் எதுவும் செய்ய முடியாத வகையிலும், ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது குறித்து விவாதம் நடத்த முடியாமலும் அமளியில் ஈடுபட்டு வரும் எதிரக்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.