Asianet News TamilAsianet News Tamil

சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி மக்களிடம் செல்வாக்கு பெற்ற மோடி… செய்வதறியாது திணறும் எதிர்க்கட்சிகள்!!

பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு முகாம்களின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு செல்வாக்கு கூடியிருப்பது தெரிய வந்துள்ளது. 

Modi vote bank Increased after surgical strike
Author
India, First Published Mar 5, 2019, 11:22 AM IST

பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு முகாம்களின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு செல்வாக்கு கூடியிருப்பது தெரிய வந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் 22க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து மகா பந்தனம் என்ற பெயரில் மெகா கூட்டணி அமைக்க முடிவு செய்தன. 

இதற்காக டெல்லியில் ஆலோசனைக் கூட்டங்களும், பல்வேறு நகரங்களில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், புல்வாமாவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கொடுஞ்செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப்பின், பிரதமர் மோடியின் செல்வாக்கு கணிசமாக கூடியுள்ளது.

Modi vote bank Increased after surgical strike

இதனால் எதிர்க்கட்சிகள் தங்கள் முரண்பாடுகளைக் கைவிட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் ஆகியோருடன் காங்கிரஸ் தலைமை புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. அவர்களை ஓரணியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ராகுல்காந்தியை சரத்பவார், சந்திரபாபு ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். 

தேர்தலில் இரு கட்சிகளும் தனித் தனியாகப் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், ஆம்ஆத்மி கட்சி டெல்லியின் 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் காங்கிரசுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து திரிணாமூல் காங்கிரசுடன் புரிந்துணர்வை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios