கோவாவில் புதிய சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் உரையாற்றிய அவர்,
‘’500, 1000 ரூபாய் செல்லாது என அரசு அறிவித்தது நல்ல முடிவு. அகந்தையால் பழைய நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கவில்லை.
கறுப்பு பணத்தை அழிக்கவும், பினாமி சொத்துக்கள் மீட்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது என்றும், இதனை அறிவிக்க 10 மாதங்களாக திட்டமிட்டதாக தெரிவித்தார்.
முந்தைய அரசுகள் தாம் எடுத்த முடிவை செயல்படுத்த தயங்கியது. ஆனால், 70 ஆண்டுகளாக இருந்த கறுப்பு பணம் என்ற நோயை 17 மாதங்களில் தீர்க்கப்படும்.

நாட்டை ஊழலிலிருந்து விடுவிக்கவே மக்கள் தனக்கு வாக்களித்ததாகவும், அரசு எதையும் மக்களிடமிருந்து மறைக்கவில்லை என்றும், உண்மையின் பக்கம் தான் எப்போதும் நிற்பதாக மோடி தெரிவித்தார்.
கறுப்பு பணத்தை ஒழிக்குமாறு கேட்டு கொண்டது மக்கள் தான். எனது ஆட்சியில் 20 கோடி பேருக்கும் மேல் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது
மேலும், வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை டிசம்பர் 30ம் தேதிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்டும். கருப்பு பணத்தை மீட்க மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்க வேண்டும் என்று சிலர் இருக்கின்றனர்.
ஆனால், என்னை உயிரோடு எரித்தாலும் செய்ய வேண்டியதை செய்யாமல் போகமாட்டேன் என்று ஆவேசமாக தெரிவித்த மோடி, அதிகார பதவியில் உட்கார நான் பிறக்கவில்லை. நாட்டிற்காக வீடு குடும்பத்தை தான் இழந்துள்ளதாக தெரிவித்தார்.
