திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி பயபக்தியுடன் சாமி தரிசனம் ெசய்தார்.

திருப்பதியில் பிரதமர்

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி நகரில் நேற்று நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

இதை தொடர்ந்து நேற்று பிற்பகல் திருமலையில் உள்ள கோவிலுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். கோவில் வாசலில் திருப்பதி - திருமலை தேவஸ்தான அறங்காவலர்கள், அதிகாரிகள் சார்பில் பிரதமருக்கு சம்பிரதாயப்படி பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பயபக்தியுடன் வழிபாடு

பின்னர் கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை வணங்கி நரேந்திரமோடி வழிபாடு செய்தார். அதன்பிறகு கோவில் வளாகத்தை சுற்றிப்பார்த்த மோடி, மீண்டும் கருவறைக்கு அருகாமையில் நின்று ஏழுமலையானை பயபக்தியுடன் வணங்கினார். பிறகு மூலவர் சந்நிதியில் சிறிது நேரம் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, பின்னர் புறப்பட்டு சென்றார்.அவருக்கு லட்டு மற்றும் கோவில் பிரசாதம், ஏழுமலையானின் திருவுருவம் பொறிக்கப்பட்ட படங்களை அர்ச்சகர்கள் வழங்கினர். பிரதமரின் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.