Asianet News TamilAsianet News Tamil

மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும்... 10 நாட்கள் யாகம் நடத்த திட்டம்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டி, யமுனை நதிக்கரையில் லட்சக்கணக்கில் விளக்குகள் ஏற்றப்படும் என்றும் 10 நாட்கள் யாகம் நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. யாகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Modi needs to be prime minister again
Author
India, First Published Oct 6, 2018, 10:45 AM IST

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டி, யமுனை நதிக்கரையில் லட்சக்கணக்கில் விளக்குகள் ஏற்றப்படும் என்றும் 10 நாட்கள் யாகம் நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. யாகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்திய நாட்டின் பிரதமரானார். அவரது 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. 2019 ஆம் ஆண்டு நாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக யாகம் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

யமுனை நதிக்கரையில் 10 நாட்கள் தொடர்ந்து யாகம் நடக்க இருப்பதாகவும், இந்த யாகம் வரும் 10 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த யாகத்தை, மதுராவில் உள்ள மோடியின் அறக்கட்டளை நடத்த உள்ளது. இதற்காக, இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களில் இருநதும் பண்டிதர்கள், இந்து மத குருக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பிரதமர் மோடிக்காக நடத்தப்படும் இந்த யாகம் குறித்து, அறக்கட்டளையின் தலைவ பவன் பாண்டே கூறும்போது, சச்சந்தி மகாயாகம் யமுனை நதிக்கரையில் நடைபெற உள்ளது என்றார். இந்தியாவில் உள்ள புண்ணியத்தலங்களான காசி, ஹரித்துவார், நாசிக் போன்ற இடங்களில் இருந்து சந்நியாசிகள் இந்த யாகத்தில் கலந்து கொள்வதாக கூறினார். யாகத்தின்போது யமுனை நதிக்கரையில் லட்ச கணக்கில் விளக்குகள் ஏற்றப்படும் என்றும் இதன் மூலம் கடவுளின் ஆசிப்பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேந்தெடுக்கப்படுவார் என்றும் கூறினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios