ஆந்திரப் பிரதேசம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடைபெறும் 104-வது இந்திய அறிவியல் மாநாடு இன்று தொடங்குகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
104-வது மாநாடு
இது குறித்து இந்திய அறிவியல் மாநாடு அமைப்பின் தலைவரும் பேராசிரியருமான நாராயண ராவ் கூறுகையில், “ இந்திய அறிவியல் மாநாட்டின் நோக்கம், தேசிய மேம்பாட்டுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு வருவதாகும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ரீநிவாசா அரங்கில் இந்த மாநாடு நாளை(இன்று)தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் எஸ்.எஸ்.எல். நரசிம்மன், அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கின்றன.
14 ஆயிரம் பேர்
அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நோபல் பரிசு பெற்ற 6 அறிவியல் விஞ்ஞானிகள், நாடுமுழுவதும் 14 ஆயிரம் அறிவியல் அறிஞர்களும், முனைவர்களும் கலந்து கொள்கின்றனர். நோபல் பரிசுபெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளை பிரதமர் மோடி கவுரவித்து, தங்கப்பதக்கம் அணிவிக்கிறார்.
ஆலோசனை
இந்த மாநாட்டில் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதன்பின், தேநீர் விருந்தில் கலந்து கொண்டு, நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானிகள், முக்கிய அறிவியல் வல்லுநர்கள் உள்ளிட்ட 50 முக்கிய நபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
திருப்பதியில் 2-வது முறையாக இந்த அறிவியல் மாநாடு நடக்கிறது. இதற்கு முன் கடந்த 1983ம் ஆண்டு 70-வது அறிவியல் மாநாடு நடந்துள்ளது. இது 104-வது மாநாடாகும்'' எனத் தெரிவித்தார்.
சாமி தரிசனம்
இந்த நிகழ்ச்சிக்குபின், அங்கிருந்து புறப்படும் பிரதமர் மோடி திருப்பதியில் திருமலையில் ஸ்ரீ வெங்டேஸ்வரா கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பதியில் 6 மணி நேரம் வரை தங்கியிருக்கு
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:55 AM IST