65 நாடுகளைச் சேர்ந்த 250 பிரதிநிதிகள் பங்கேற்கும் சைபர் பாதுகாப்பு மாநாட்டை வரும் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் ஆலோசிக்கப்பட்டாலும் சைபர் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ராய்சினா டைலாக் எனப்படும் கலந்துரையாடல் முறையில் இந்த மாநாடு 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை டெல்லியில் நடத்தப்பட உள்ளது.
நேபாளம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.ஐநா சபை சார்பில் அதன் பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டர்ஸ் இந்த மாநாட்டில் உரை நிகழ்த்துவார் என தொிவிக்கப்பட்டுள்ளது.
