modi function in nagpur
டிஜிட்டல் பேமெண்ட்டை ஊக்கப்படுத்த மத்திய அரசு அறிவித்த லக்கி கிரஹாக் யோஜனா திட்டத்தில் மஹாராஷ்டிரா, லட்டூர் பகுதியைச் சேர்ந்த 20வயது பொறியியல் மாணவிக்கு ரூ. ஒரு கோடி பரிசு கிடைத்துள்ளது.
அதேபோல டிஜிட்டல் டிஜிதன் வியாபார் யோஜனா திட்டத்தில் சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த அனந்த பத்மநாபனுக்கு ரூ. 50 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.
ரூ.258 லட்சம்
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் மக்களுக்கான லக்கி கிரஹாக் யோஜனா, வியாபாரிகளுக்கான ‘டிஜிதன் வியாபார் யோஜனா’ திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த திட்டங்களில் வெல்லும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசு வழங்க மத்திய அரசு ரூ.258 கோடியை ஒதுக்கியது. 16 லட்சம் வாடிக்கையாளர்கள், வர்த்தகர்களைத் தேர்வு செய்தது.
இவர்களில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கான பரிசளிப்பு விழா அம்பேத்கர் பிறந்தநாளான நேற்று நாகபுரியில் நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
20-வயது மாணவி
‘லக்கி கிரஹாக் யோஜனா’ திட்டத்தின் முதல் பரிசான ரூ. ஒரு கோடியை மஹாராஷ்டிரா மாநிலம், லட்டூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஷ்ரதா என்பவருக்கு கிடைத்தது. இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு மின்னணு பொறியியல் படித்து வருகிறார். இவர் ரூபே கார்டு மூலம் ரூ.1,590 பரிமாற்றம் செய்தபோது அதிர்ஷ்டசாலியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிரியருக்கு ரூ.25 லட்சம்
2-வது பரிசான ரூ.50 லட்சத்தை குஜராத் மாநிலம், காம்பத் நகரைச் சேர்ந்த ஹர்திக் குமார் பெற்றார். ரூ.25 லட்சம் கொண்ட 3-வது பரிசை உத்தகாண்ட் மாநிலம், ஷெர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாரத்சிங் பெற்றார். இவர் தனது ரூபே கார்டு மூலம் ரூ.100 பரிமாற்றம் செய்து இருந்தார்.
சென்னை வியாபாரி
‘டிஜிதன் வியாபார் யோஜனா’ திட்டத்தில் முதல் பரிசாக சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அனந்த பத்மநாபனுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. தாம்பரம் ஜி.ஆர்.டி. ஜூவல்லரியில் கிளீன் கங்கா திட்டத்துக்காக 300 ரூபாயை நன்கொடை அளித்ததை டிஜிட்டல் பேமெண்ட்டாக அனந்த பத்மநாபன் ஏற்றுக்கொண்டார், அதில் இவர் தேர்வானார்.
2-வது பரிசு
2-வது பரிசாக மஹாராஷ்டிரா மாநிலம், தானேயில் சிறிய அழகுநிலையம் நடத்திவரும் ராகினி ராஜேந்திர உத்கருக்கு ரூ.25 லட்சம் கிடைத்து. இவர் தனது வாடிக்கையாளரிடமிருந்து ரூ.501 டிஜிட்டல் பேமெண்ட்முறையில் பெற்றார் தெலங்கானா, அமர்பீத் நகரில் துணிக்கடை நடத்திவரும் 33-வயது சேக் ரபீக் என்பருக்கு 3-ம் பரிசாக ரூ.12 லட்சமும் வழங்கப்பட்டது.
