கோவாவில் பிரதமர் மோடி சர்வதே விமானநிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர் உரையாற்றினார்.

500 , 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டு மக்களின் சிரமத்தை உணர்கிறேன். இது வெறும் 50 நாட்களுக்கு மட்டுமே.

டிசம்பர் 30-க்கு பிறகு நான் எடுத்துள்ள இந்த முடிவு தவறு என உணர்ந்தால் என்னை நீங்கள் தாராளமாக கேள்வி கேட்கலாம் என மோடி தெரிவித்தார்.

70 வருடங்களாக கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும்,கறுப்பு பணத்தை பதுக்கியவர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவித்த மோடி, நாட்டுக்காக தனது உயிரையும் விட தயாராக உள்ளதாகவும், நாட்டிற்காகவே தனது குடும்பத்தையும் விட்டு வந்திருப்பதாக கூறி கண் கலங்கினார்.

இந்தியாவில் ஏழைய மக்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், யார் யார் எல்லாம் ஊழலில் ஈடுபட்டார்களோ அவர்களெல்லாம் இன்று 4000 ஆயிரம் ரூபாய்க்காக நீண்ட வரிசையில் நிற்கின்றனர் என மோடி தெரிவித்தார்.

மேலும், ஊழலை எதிர்க்கும் இந்த நடவடிக்கைக்காக மக்கள் தனக்கு ஆதரவு தர வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.