சிம்லா அருகே பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த 28 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேசம் சோலன் என்ற பகுதியில் இருந்து சின்னாவூர் என்ற இட்த்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ராம்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் இறந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் இதுவரை மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 28 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.