இந்துக்களுக்கு எதிரான கருத்து?.. கேரள சபாநாயகர் மீது குற்றச்சாட்டு - வழக்கு பதிவு செய்த பாஜக தலைவர்! ஏன்?
உலகின் முதல் விமானம், புஷ்பக விமானம் என்று கூறி இந்துகளின் நம்பிக்கைகளை அவமதித்ததாக, கேரள சட்டசபை சபாநாயகர் A.N ஷம்சீர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிற்கிறோம் என்ற போர்வையில், இந்து மத நம்பிக்கைகளை அவமதித்ததாக கேரள சட்டசபை சபாநாயகர் ஏஎன் ஷம்சீர் மீது பாஜகவின் திருவனந்தபுரம் மாவட்ட துணைத் தலைவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஜூலை 21ம் தேதி அன்று எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, ஏ.என்.ஷம்சீர், கல்வித்துறையில் நாம் கட்டுக்கதைகளுக்கு பதிலாக அறிவியலை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது விமானத்தை கண்டுபிடித்தவர் யார் என்று கேள்வி எழுப்பி, அதற்கு பதிலும் அளித்துள்ளார்.
விமானத்தை கண்டுபிடித்தது யார் என்று என்னை கேட்டால், நான் அதற்கு ரைட் சகோதரர்கள் என்று பதில் அளிப்பேன், ஆனால் இந்துத்துவ நம்பிக்கையாளர்கள், உலகின் முதல் விமானம் புஷ்பக விமானம் என்று கூறுவார்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஷாம்சீர் மேலும் பேசுகையில், விநாயகப்பெருமான் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தான் தன் முகத்தைப் பெற்றதாக இந்துத்துவா சித்தாந்தவாதிகள் பிரச்சாரம் செய்து வருவதாகவும், அது கட்டுக்கதை என்றும் கூறினார்.
என்னது.. 500 ரூபாய் நோட்டு செல்லாதா? மத்திய நிதியமைச்சகம் சொன்ன பதில் இதுதான்..
"அறிவியலுக்குப் பதிலாக அவர்கள் இதுபோன்ற கட்டுக்கதைகளை ஊக்குவிக்கிறார்கள்" என்று சபாநாயகர் கூறினார். இந்நிலையில் அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில், ஷம்சீரின் கருத்துக்களை தீவிரமான ஒன்றாக பார்க்கவேண்டும் என்றும், பள்ளிக் குழந்தைகள் முன்னிலையில் அவர் இதை பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.
மேலும், ஐபிசி செக்சன் 153 (A) பிரிவின் கீழ், மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகையை வளர்ப்பது மற்றும் 295 (A) மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம் Mr. மோடி.. பிரதமரின் உரை - பதிலளித்த ராகுல் காந்தி!