மணிப்பூரில் போலீஸ் ஐஜி வாகனம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாலில் உள்ள குவாகீதெல் பகுதியில் போலீஸ் ஐஜி வாகனம் மர்ம கும்பல்களால் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, வன்முறை கும்பலை போலீசார் கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 2005 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கபீப், டிடிம் சாலையில் இம்பால் நோக்கி அவாரது பாதுகாப்பு குழுவுடன் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். மர்ம கும்பல் நடத்திய இந்த தாக்குதலில் ஐஜி கபீப் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பித்துள்ளார். எரிந்துகொண்டிருந்த வாகனத்தின் உள்ளே இருந்து வெளியேறிய தோட்டா காலில் தாக்கியதில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்சாரம் பாய்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு!!

சம்பவ இடத்தில் இருந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, வன்முறை கும்பலை கலைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரியின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அம்மாநில போலீசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் எவ்வித இடையூறுகளுக்கும் இடமளிக்காமல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தலைமையில் அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு தொடர்பான உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருவதாக முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக் கலவரத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.