ஜார்கண்ட் மாநிலத்தில் அனாதைக் குழந்தைகளை விற்பனை செய்த 2 கன்னியாஸ்திரிகளைபோலீசார் கைது செய்ததுள்ளனர்.

‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’ என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது அன்னை தெரசாதான். ஏழை மக்களுக்காக அவர்களிடம் அன்பு காட்டுவதற்காக அன்னை தெசாவால் தொடங்கப்பட்டது தான் ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’. அன்னை தெரேசா தொடங்கிய இந்த அறக்கட்டளை நாடுமுழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை வறுமையால் வாடுபவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியோர் ஆகியோருக்கும் பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறது.

அத்தகைய  சிறப்பு வாய்ந்த ஒரு நிறுவனத்தில் வேசையாற்றம் 2 கன்னியாதிரிகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை விற்பனை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’ அறக்கட்டளையின் கீழ் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகம் குழந்தைகளுக்கு மட்டும் இன்றி, திருமணம் ஆகாமல் சிறுவயதிலேயே தாயான சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதரவு அளிக்கிறது.

இந்த குழந்தைகள் காப்பகத்தில் இருந்து பச்சிளம் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ரூ.1 லட்சம் வரை பெறப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’ அறக்கட்டளையின் தலைவியான கன்னியாஸ்திரி கொன்சிலியா மற்றும் அவருடைய உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரி ஆகிய இருவரும் சேர்ந்து, குழந்தைகள் காப்பகத்தில் பிறந்த 3 பச்சிளம் குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரம் வீதம் 3 தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கொன்சிலியா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். காப்பகத்தில் இருந்து குழந்தைகளை வாங்கி சென்ற தம்பதிகளின் விவரங்கள் குறித்து அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் இதற்கு முன்பு இது போன்று குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளனரா எனவும் விசாரனை நடைபெற்று வருகிறது.