இன்ஷா அல்லாஹ்... ஆட்டின் விலை ரூ.1 கோடி: விற்க மறுத்த உரிமையாளர்!
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் செம்மறி ஆடு ஒன்று ரூ.1 கோடி வரை விலை போனது பேசுபொருளாகி உள்ளது
இஸ்லாமியர்களின் முக்கிய புனித பண்டிகைகளில் ஒன்றான ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில் தியாகத்திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆடுகளை பலியிட்டு, அதனை சமைத்து உற்றார், உறவினர், நண்பர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து முஸ்லிம்கள் கொண்டாடுவர்.
பள்ளிவாசல்களில் நமாசை ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டிருப்பதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் செம்மறி ஆடு ஒன்று ரூ.1 கோடி வரை விலை போனது பேசுபொருளாகி உள்ளது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் வசிப்பவர் ஆடு மேய்ப்பவரான ராஜூ. அவரிடம் உள்ள செம்மறி ஆட்டில், முஸ்லிம் சமுதாயத்திற்கு மங்களகரமானதாகக் கருதப்படும் 786 என்ற எண் உள்ளது. இதனால், அந்த ஆட்டின் விலை ரூ.1 கோடி வரை விலை போயுள்ளது. ஆனாலும், அந்த ஆட்டினை அவர் இந்த ஆண்டு விற்கவில்லை. மாறாக அதன் பாதுகாப்பை அவர் பலப்படுத்தியுள்ளார்.
ராஜூ சிங்கும் அவரது குடும்பத்தினரும் சுரு மாவட்டத்தின் தாராநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஆடு மேய்கும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது ஆடுகளை வளர்ப்பதுடன், மற்றவர்களின் ஆடுகளையும் ஊதியத்தின் அடிப்படையில் பராமறித்துத் தருகிறார்கள். செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், பால் விற்கும் தொழில்களை ராஜூ சிங்கின் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.
தடுத்து நிறுத்தப்பட்ட கான்வாய்: மீண்டும் இம்பால் திரும்பினார் ராகுல் காந்தி!
25 ஆண்டுகளாக தாம் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், அதில் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் ராஜூ சிங் தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு முன் ஆடு ஒன்று ஆண் குட்டியை ஈன்றதாகவும், மெந்தா என்றழைக்கப்படும் அந்த ஆட்டுக்குட்டியின் வயிற்றில் பிறந்ததில் இருந்தே, முஸ்லிம் சமூகத்தில் மங்களகரமானதாகக் கருதப்படு 786 என்ற எண் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த ஆட்டைப் பார்த்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சிலர், பக்ரீத் பண்டிகையையொட்டி, அந்த ஆட்டினை விலைக்கு கேட்டுள்ளனர். ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ராஜூ சிங் அந்த ஆட்டினை விற்க மறுத்து விட்டார்.
அத்துடன், அந்த ஆட்டினை அவர் தற்போது மிகவும் பாதுகாப்பாக கவனித்து வருகிறார். எப்போதும் அந்த ஆட்டுக்குட்டியை தன்னுடனையே வைத்திருக்கிறார். வெளியில் எங்காவது சென்றால் அறைக்குள் அதனை பூட்டி வைத்து விட்டு செல்கிறார். அந்த ஆட்டுக்குட்டிக்கு, பசுந்தீவனம், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட கொடுக்கும் அவர், அதை விற்க விரும்பவில்லை எனவும், தன்னுடனேயே வைத்து வளர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.