பதவியேற்ற உடனே முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றவுடன் 6 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையொப்பமிட்டுள்ளார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த முக்கிய வாக்குறுதியை பதவியேற்ற சில நிமிடங்களிலேயே நிறைவேற்றி இருக்கிறார். முதல்வர் இல்லத்தின் முன் இருந்த இரும்பு தடுப்புகளை அகற்றி இருக்கிறார். இதனால், பதவியேற்பு விழா முடிவதற்கு முன்பே, ஹைதராபாத்தில் உள்ள முதல்வரின் இல்லமான பிரகதி பவன் முன்பு பரபரப்பாக இருந்தது.
புல்டோசர்கள், டிராக்டர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் குடியிருப்புக்கு வெளியே இரும்பு கம்பிகளை பிடுங்குவதைக் காண முடிந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பேரிகேட்களை அகற்றுவேன் என்று தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார்.
மூன்று மாநிலங்களில் முதல்வர்களை அறிவிப்பதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி!
முன்னதாக, ஹைதராபாத் எல்பி ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில், தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். 2014ஆம் ஆண்டு உருவான தெலுங்கானாவின் இரண்டாவது முதல்வராகப் பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக பதவியேற்ற மல்லு பாட்டி விக்ரமார்கா உள்பட 11 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்சிக்கு வந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, தேர்தல்களுக்கு முன் அளித்த ஆறு முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடினமான பணியை காத்திருக்கிறது.
அதன்படி, முதல்வர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றவுடன் 6 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையொப்பமிட்டுள்ளார். இந்த வாக்குறுதிகள் தான் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவற்றை நிறைவேற்றுவதற்கான நிதியைக் கண்டுபிடிப்பது ஒரு கடினமான பணியாகும்.
குறிப்பாக, தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியின் ஆறு வாக்குறுதிகளில் அடங்கும்.
இன்டர்நேஷனல் பிராடுகளுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு! சர்வதேச அழைப்புகளுக்கு புதிய தடை!