பெட்ரோலில் "எத்தனால்" வேதிப்பொருள் கலந்து இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் பெட்ரோல், டீசல் என தரம் வாரியாக பிரித்து மத்திய அரசு சப்ளை சப்ளை செய்து வருகிறது.

தற்போது, பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு பலமடங்கு அதிகரிதுள்ளது. இதனால், பெட்ரோலிய பொருள்கள் அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. இதன்காரணமாக அன்னிய செலவாணியும் அதிகரித்த வருகிறது. 

இந்த நிலையில் பெட்ரோலில், "எத்தனால்" எனும் வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிதலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.