அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  10 லாரிகளில் நிவாரனப் பொருட்களை  அனுப்பிவைத்த லாரிகள்  தமிழக கேரள எல்லையை அடைந்ததும் அங்குள்ள கேரளா மீட்ப்புப் பணியில் இருப்பவர்களிடம் சென்றடைந்தது. 

கேரளத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பெருமழை மற்றும் வெள்ளத்தில் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். பலர்  உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி தங்களின் வீடுகளையும் இழந்த மக்களை கேரள மாநில அரசு முகாம்களில் தங்க வைத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது.

வரலாறு காணாத மழையினால் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், தூத்துக்குடி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாநகராட்சிகளின் மூலம் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. 

நேற்று மாலை கொடியசைத்து துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ரூ.2 கோடி மதிப்பிலான குழந்தைகள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் உடைகள், உணவு பொருட்கள், பிரஷ்,பேஸ்ட் என 31 விதமான அத்தியாவசிய பொருட்கள் 21 வாகனங்களில் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள மக்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திப்பதாகவும், கண்டிப்பாக மீண்டு வரும் என்றும், அதற்கான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து தமிழகம் செய்யும் என்றார்.

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  10 லாரிகளில் நிவாரனப் பொருட்களை  அனுப்பிவைத்த லாரிகள்  தமிழக கேரள எல்லையை அடைந்ததும் அங்குள்ள கேரளா மீட்ப்புப் பணியில் இருப்பவர்களிடம் சென்றடைந்தது. அப்போது நிவாரணப்பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பேசுகையில்; தமிழக அரசும் தமிழக மக்களும் சேர்ந்து பத்து லாரிகளில் ரேஷன், உணவு, பழம், பிஸ்கட் உடை கொடுத்துள்ளனர் அவர்களுக்கு கேரளமக்கள் என்றென்றும் கடமைப் பட்டுள்ளோம் என நெகிழ்ந்தனர்.