Asianet News TamilAsianet News Tamil

Budget Session: நாடாளுமன்றத்தை முடக்கும் காங்கிரஸ்... அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடும் கண்டனம்

மோடி அரசு ஓடி ஒளிந்துகொள்ளப் பார்ப்பதாக கூறிய ஜெய்ராம் ரமேஷுக்கு பதில் அளித்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் கட்சிதான் நாடாளுமன்றச் செயல்பாடுகளை முடக்குகிறது என்று கூறியுள்ளார்.

Minister Pralhad Joshi responds to Jairam Ramesh tweet
Author
First Published Feb 6, 2023, 3:39 PM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்றாவது நாளாக மக்களவை இன்று காலை 11 மணிக்குக் கூடியது. அவை தொடங்கிய உடனேயே அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்துள்ளார். ஏற்கெனவே முதல் இரண்டு நாட்களும் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினரின் அமளியால் மக்களவை மீண்டும் முடங்கியது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், “தொடர்ந்து மூன்றாவது நாளாக, பிரதமருடன் தொடர்படைய அதானியின் மகாமெகா ஊழல் குறித்து விசாரணை குழு அமைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்பவைப்பதற்குக்கூட எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படவில்லை. மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மோடி அரசு ஓடி ஒளிந்துகொள்ளப் பார்க்கிறது!” என்று தெரிவித்துள்ளார்.

உலகளவில் எரிசக்தி துறை முதலீட்டுக்கு சிறந்தநாடு இந்தியா! முதலீ்ட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Pralhad Joshi and Jairam Ramesh

இதற்கு பதில் அளித்து ட்விட் செய்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “உண்மை என்னவென்றால்- நாடாளுமன்றம் நடைபெறுவதில் காங்கிரஸ் கட்சிக்கு ஆர்வம் இல்லை. மக்கள்நலச் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. பிரதமர் மோடி அரசின் கீழ் நாடாளுமன்றம் ஆக்கபூர்வமாக செயல்படுவதை அவர்கள் வெறுக்கிறார்கள்” என்று சாடியுள்ளார்.

இன்றைய நாடாளுன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போதும் அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Sonia Gandhi: ‘ஏழைகள் மீதான மோடி அரசின் சத்தமில்லா தாக்குதல்தான் பட்ஜெட்’: சோனியா காந்தி விளாசல்

Follow Us:
Download App:
  • android
  • ios