உலகளவில் எரிசக்தி துறை முதலீட்டுக்கு சிறந்தநாடு இந்தியா! முதலீ்ட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
எரிசக்தி துறையில் முதலீட்டுக்கு சிறந்த நாடாக இந்தியா இருந்துவருகிறது. உலக முதலீட்டாளர்கள் இதைப்பயன்படுத்திக்கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
எரிசக்தி துறையில் முதலீட்டுக்கு சிறந்த நாடாக இந்தியா இருந்துவருகிறது. உலக முதலீட்டாளர்கள் இதைப்பயன்படுத்திக்கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு மற்றும் இந்தியா எரிசக்தி வாரம் 2023 எனும் 3 நாட்கள் கருத்தரங்கு, கண்காட்சியை பெங்களூருவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உலகளவில் இருந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள், 3ஆயிரம் பிரதிநிதிகள், 1000 அரங்குகள், 500 விளக்கக்கூட்டங்கள் மூலம் இந்தியாவின் எதிர்கால எரிசக்தி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 5 நீதிபதிகள் பதவி ஏற்பு முழுவிவரம் என்ன?: எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது
எத்தனால் கலந்து பெட்ரோல் விற்கும் 84 சில்லறை விற்பனை நிலையங்களை 11 மாநிலங்களில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் மூலதனச் செலவுக்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த ஒதுக்கீட்டின் மூலம், ஹைட்ரஜன், சோலார் பவர், சாலைப் போக்குவரத்துவசதிக்கு அதிகமான ஊக்கம் கிடைக்கும்.
இங்கு வந்துள்ள முதலீட்டாளர்களிடம் நான் கேட்பது என்னவெனில், இந்தியாவின் எரிசக்தி துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உலகளவில் முதலீட்டுக்கு சிறந்தநாடாக இன்று இந்தியா விளங்குகிறது.
அதானி விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கம்:தீவிரமாகும் எதிர்க்கட்சிகள் போராட்டம்
2070ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கார்பன்வெளியேற்றத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத எரிபொருளை பயன்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
இந்த இலக்கை அடைவதற்காக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் ஏழ்மை நிலையில் இருந்து மக்கள் முன்னேறி நடுத்தரக் குடும்ப நிலைக்கு உயர்கிறார்கள்.
உலகிலேயே மொபைல் போன் தயாரிப்பில் 2வது பெரிய நாடாகஇந்தியா இருக்கிறது, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் 4வது இடத்தில் இந்தியா இருக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பு திறனை 250மெட்ரிக்மில்லியன் டன் என்ற அளவை 450மெட்ரிக்மில்லியன் டன்னாக உயர்த்த பணியாற்றி வருகிறோம்.
கர்நாடகாவில் HAL ஹெலிகாப்டர் தொழிற்சாலை, சென்னைக்கு சிறப்பு திட்டம்:பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவில் குழாய்வழி சமையல்எரிவாயு கொண்டு செல்வது தற்போது ரூ.22 ஆயிரம் கி.மீலிருந்து, 35ஆயிரம் கி.மீக்கு விரிவுபடுத்தப்படும்.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு என்பது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி இந்தியா நகர்கிறது என்பதை குறிக்கிறது
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.