Asianet News TamilAsianet News Tamil

Supreme Court: உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 5 நீதிபதிகள் பதவி ஏற்பு முழுவிவரம் என்ன?: எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது

உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Five new Supreme Court judges took their swearing in from CJI D Y Chandrachud.
Author
First Published Feb 6, 2023, 1:45 PM IST

உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில்உள்ள 34 நீதிபதிகள் எண்ணிக்கையில் தற்போது 32 ஆக உயர்ந்துள்ளது.
புதிய நீதிபதிகளாக பங்கஜ் மித்தல், சஞ்சய் கரோல், வி.வி.சஞ்சய் குமார், அஷானுதீன் அமானுல்லாஹ், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பதவி ஏற்றனர்

இந்த 5 நீதிபதிகள் பெயரையும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி மத்தியஅரசுககு பரிந்துரை செய்தது.ஆனால், நீண்ட காலதாமத்துக்குப்பின் கடந்த 4ம் தேதி மத்திய சட்டஅமைச்சகம் 5 நீதிபதிகளுக்கும் ஒப்புதல் அளித்தது.

அதானி விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கம்:தீவிரமாகும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

Five new Supreme Court judges took their swearing in from CJI D Y Chandrachud.

நீதிபதிகளை நியமிப்பதில் கொலிஜியத்துக்கும், மத்திய அ ரசுக்கும் இடையே கடும் மோதல், வாக்குவாதங்கள் தொடர்ந்து ஏற்பட்டன. பழைய நடைமுறையை மாற்ற வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜு வலியுறுத்தினார். குடியரசுத் துணைத்தலைவர் ஜெக்தீப் தனகரும் கொலிஜியம் நீதிபதிகளை நியமிப்பதை எதிர்த்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

இரு தரப்புக்கும் நீண்ட விவாதங்கள், கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில் 5 நீதிபதிகள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

கர்நாடகாவில் HAL ஹெலிகாப்டர் தொழிற்சாலை, சென்னைக்கு சிறப்பு திட்டம்:பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லாஹ், அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் புதிய நீதிபதிகளாக பதவிஏற்றனர்

அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தால், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் பெயரை கொலிஜியம் பரிந்துரை செய்தும் அதற்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை.

ஒருவேளை அனுமதியளித்தால், உச்ச நீதிமன்றத்தின் முழுமையான 34 நீதிபதிகள் அமர்வுடன் பணியாற்றிய முதல் தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் இருப்பார். சட்டம் மற்றும், ஜாமீன், வர்த்தகரீதியான வழக்குகள் பல நிலவையில் உள்ளதையடுத்து, நீதிபதிகள் விரைவாக நியமிக்கப்பட்டனர். 

நீதிபதி மித்தல் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியாக கடந்த 2022, அக்டோபர் 14ல் நியமிக்கப்பட்டார். இப்போது உச்ச நீதிமன்றத்துக்கு மித்தல் மாற்றப்பட்டுள்ளார்.

Five new Supreme Court judges took their swearing in from CJI D Y Chandrachud.

1961, ஆகஸ்ட் 23ம் தேதிபிறந்த நீதிபதி கரோல் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2019, நவம்பர் 11ம் தேதி நியமிக்கப்பட்டார். முதலில் இமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் கரோல் பணியாற்றினார்.

1963ம் ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி பிறந்த நீதிபதி குமார் கடந்த 2021, பிப்ரவரி 14ம் தேதிமணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தி் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக குமார் பணியாற்றினார்.

1963ம்ஆண்டு மே 11ம் தேித பிறந்த நீதிபதி அமானுல்லாஹ் 20211, ஜூன் 20ல் பாட்னா உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றத்தில் அமானுல்லாஹ் பணியாற்றினார்.

கடந்த 1965ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்த நீதிபதி மிஸ்ரா, 2013, ஆகஸ்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us:
Download App:
  • android
  • ios