காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

காவிரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 5000 கோடி திட்ட மதிப்பீட்டில் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் கர்நாடக அரசு ஏற்கனவே சமர்பித்து இருந்தது. அணை அமையும் இடம், அணையின் பரப்பளவு உள்ளிட்ட அம்சங்கள் வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. இதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் கர்நாடாக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து வரைவு அறிக்கையின் அடிப்படையில் காவிரியாற்றில் கர்நாடகா மேகதாது அணை கட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக அரசு தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.