Asianet News TamilAsianet News Tamil

பட்டப்பகலில் கம்பத்தில் கட்டிவைக்கப்பட்ட பெண்... வைரலான வீடியோ.... என்ன ஆச்சு தெரியுமா?

இந்த சம்பவம் நடைபெறும்போது சிறுவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அந்த பகுதியில் கூடி இருந்தனர். 

 

Meghalaya Woman Tied To Pole, Heckled By Onlookers
Author
India, First Published May 14, 2022, 9:56 AM IST

மெகாலயா மாநிலத்தின் ஜோவாய் பகுதியில் உள்ள மார்கெட் ஒன்றில் பெண் ஒருவரை கம்பத்தில் கட்டி வைக்கப்படும் காட்சிகள் அடங்கிய  வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மார்கெட்டில் பிக் பாக்கெட் அடித்த போது சிக்கிய பெண்ணை அங்கிருந்தவர்கள் பிடித்து தாக்கும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

வைரல் வீடியோவின் படி பெண் ஒருவரை பலர் ஒன்று கூடி ஷெட் ஒன்றிற்கு அழைத்து செல்கின்றனர். இந்த சம்பவம் பகல் நேரத்தில் நடைபெற்று இருக்கிறது. அழைத்து செல்லும் போது, அருகில் வருபவர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பிய படி கொண்டு செல்கின்றனர். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை அங்கு இருந்த கம்பம் ஒன்றில் கட்டி வைக்ககின்றனர். 

வீடியோ:

இந்த சம்பவம் நடைபெறும்போது சிறுவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அந்த பகுதியில் கூடி இருந்தனர். இவர்களில் சிலர் அந்த பெண்ணை பார்த்து நக்கல் செய்யும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது. கட்டி வைக்கப்பட்ட பெண்ணின் ஷால் மற்றும் பர்ஸ் உள்ளிட்டவை வீடியோவில் எங்கும் காணப்படவில்லை. 

“இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரி மற்றும் பெண் போலீஸ் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளது. வீடியோவில் காணப்படும் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தப்படும். பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார். 

பெண் பாதுகாப்பு:

பெண் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர், இந்த சம்பவம் குறித்து மேற்கு ஜைன்டியா மலைப் பகுதி மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும் என்றும் பெண் பாதுகாப்பாக இருப்பார் என நம்புவதாக தெரிவித்து இருக்கிறார்.

பெண் உரிமைகள் செயற்பாட்டாளர் அக்னிஸ் கார்ஷிங் இந்த சம்பவத்திற்கு தனது கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். “பெண்ணை துன்புறுத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்,” என அவர் தெரிவித்து இருக்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios